முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து மெட்விடேவ் அரைஇறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : உலக தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

இதில் 4-வது நாளில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (டோக்கியோ 1970 பிரிவு) 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 4-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவ்வை சந்தித்தார். 1 மணி 21 நிமிடம் நடந்த இந்த மோதலில் மெட்விடேவ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அத்துடன் 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடரில் அரைஇறுதிக்குள் நுழைந்த முதல் ரஷிய வீரர் என்ற பெருமையை பெற்றார். 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜோகோவிச் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். 

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்வாட்ஸ்மேனை தோற்கடித்து முதலாவது வெற்றியை பெற்றார். தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய ஸ்வாட்ஸ்மேன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.

நேற்று நடைபெற்ற  ஆட்டங்களில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் ஸ்வெரேவ், மெட்விடேவ்-ஸ்வாட்ஸ்மேன் மோதினர்.  ஜோகோவிச்-ஸ்வெரேவ் இடையிலான ஆட்டத்தில் வெற்று பெறுபவர் அந்த பிரிவில் இருந்து 2-வது வீரராக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைப்பார். 

நேற்று முன்தினம் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (லண்டன் 2020 பிரிவு) ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 7-5 என்ற நேர்செட்டில் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை வீழ்த்தி ஆறுதல் வெற்றி கண்டார். இந்த வெற்றியை பெற அவருக்கு 74 நிமிடம் தேவைப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து