பெங்களூரு : நீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி பெங்களூரில் பதுங்கி இருந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் வைத்து மாணவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவியின் தந்தையை 5 நாள் விசாரித்த போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.