முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 இருக்கை கார்களில் இனி 6 காற்று பைகள் கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 இருக்கை கார்களில் 6 காற்றுப் பைகள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கார்களில் பயணிப்போரின் பாதுகாப்பு கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெஞ்சாலை துறை வெளியிட்டது. 8 இருக்கைகள் கொண்ட கார்களில் ஓட்டுநர், பக்கத்தில் அமர்ந்திருப்போர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் 6 காற்றுப் பைகள் பொருத்துவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கூடுதல் காற்றுப் பைகள் காரணமாக காரின் விலை 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து