முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்கள் புடை சூழ காரில் வந்து நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிவப்பு நிற காரில் வந்தார். அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை சூழ வந்த விஜய், நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

கடந்த முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற சாண்ட்ரோ காரில் வந்து வாக்களித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து