முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாநில தேர்தல் முடிவு: நடிகை குஷ்பு கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Khushbu 2023-12-03

Source: provided

சென்னை : 4 மாநிலத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி உறுப்பினரும், பிரபல நடிகையுமான குஷ்பு 4 மாநில தேர்தல் முடிவு குறித்து கூறியதாவது:-

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க இருக்கிறது. 4 மாநிலத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி மக்கள் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த 4 மாநிலத் தேர்தல் செமி பைனல் (அரையிறுதி) ஆட்டம் போன்றது என்று வர்ணித்தனர். 

தற்போது அவர்கள் அரையிறுதியிலேயே தோல்வியடைந்து வெளியேறி விட்டனர்.பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் இலக்கு 400 இடங்களில் வெற்றி பெறுவதாகும். அதை இந்த தேர்தல் உறுதி செய்துள்ளது. ராகுல் காந்தியை மக்கள் நிராகரித்து விட்டனர். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து