முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர ரயில் விபத்துக்கு லோகோ பைலட்கள் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததே காரணம் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      இந்தியா
Ashvini

Source: provided

புதுடெல்லி : ஆந்திர மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துக்கு  ரயிலின் லோகோ பைலட்கள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம் என்று  ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகபள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி ராயகடா பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது.  முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதி இந்த விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் பயணிகள்   14 பேர்  பலியாகினர். 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 

இந்த விபத்துக்கு  ரயிலின் லோகோ பைலட்கள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம் என்று  ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வே மேற்கொண்டு வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அஸ்வினி வைஷ்ணவ்  கூறியதாவது:  

ஆந்திர மாநிலத்தில் 2 ரயில்கள் மோதிய விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் விபத்து ஏற்படுத்திய ஒரு ரயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்து கொண்டிருந்தனர். 

இதனால் கவனச் சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. இப்போது இது போன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, உறுதி செய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து