முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

532 நாட்கள் விடுமுறை எடுத்த அதிபர் பைடன் : எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      உலகம்
Joe-Biden 2024-09-08

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீசும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். தற்போதைய அதிபர் ஜோ பைடன், அதிபர் தேர்தலில் களமிறங்கினாலும், பின்னர் வயது முதிர்வு காரணமாக ஒதுங்கி கொண்டார்.

81 வயதாகும் அவர், கடந்த நான்கு வருடங்களில் எடுத்த விடுப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் 532 நாட்கள் விடுப்பு எடுத்து உள்ளார். அதாவது, அவர் பதவிக் காலத்தில் 40 சதவீத நாட்களை விடுமுறையில் கழித்துள்ளார். 

இது ஐந்து ஆண்டுகளில் சராசரி அமெரிக்க தொழிலாளி ஒருவருக்கு கிடைப்பதை விட அதிகம். தொழிலாளிக்கு ஆண்டுக்கு சராசரியாக 11 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இந்த கணக்குப்படி, ஜோ பைடன் 48 ஆண்டுகள் எடுக்க வேண்டிய விடுமுறையை 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார்.

இத்தனை நாட்கள் ஜோ பைடன் விடுமுறை எடுத்ததை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலை, உள்நாட்டில் பல்வேறு சவால்கள் நிலவி வரும் சூழலில் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பது சரியா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து ஜோ பைடன் ஆதரவாளர்கள் கூறும்போது, பைடன் அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலும், இருக்கும் இடத்தில் இருந்து பணிபுரிகிறார். விடுமுறையில் இருந்தாலும் கூட தொடர்ச்சியாக வீடியோ கால் மூலம் கூட்டங்களை நடத்தி ஆலோசனை வழங்குகிறார் என தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து