முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      அரசியல்
Priyanka-Kakkar-2024-10-10

புது டெல்லி, டெல்லி சட்ட தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா கக்கர் தெரிவித்துள்ளார். 

ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா கக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லி சட்ட தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரசையும்,  பா.ஜ.க.வையும் நாங்கள் தனித்து எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள். அண்மையில் நடைபெற்ற அரியானா சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதன், அதீத நம்பிக்கையின் காரணமாக இறுதியில் தோல்வியை சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு பூஜ்ய இடங்களே இருந்தன. இருப்பினும், 2024 பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் 3 இடங்களை பகிர்ந்து கொண்டது.

அரியானாவில் கூட்டணி அமைக்க இண்டியா கூட்டணி கட்சிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் முறியடித்தது. கூட்டாளிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது அவசியம் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை. 

ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கத் தவறி விட்டன. ஆம் ஆத்மி அரியானாவில் போட்டி யிட்ட அனைத்து இடங் களிலும் தோல்வியடைந்தாலும், காங்கிரஸ் பெரும்பான்மையை விட மிகக் குறைந்து விட்டது. 

இது, ஆளும் பா.ஜ.க. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து