முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
நோபல் பரிசுக்கு ஹிட்லர் பரிந்துரைக்கப்பட்டார் தெரியுமா?

ஹிட்லர், வரலாற்றில் படிந்த ரத்தகறை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் கொடுங்கோலராகவும், யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரியாகவும் உலகம் முழுவதும் அவரை கண்டு ஒரு காலத்தில் நடுநடுங்கியது. இந்த சூழலில் அவர் உலகின் உயரிய விருதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா.. அதுவும் எதற்கு தெரியுமா... சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு. அவரை பரிந்துரை செய்து 1939 இல் சுவீடன் நாட்டின் எம்பி எரிக் பிரான்டிட் என்பவரால் பரிந்துரை செய்யப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக அந்த பரிந்துரையை அந்த எரிக் பிரான்டிட் திரும்ப பெற்றுக் கொண்டார். இதில் ஒரு முரண் நகையான விசயம் என்னவென்றால், நோபல் பரிசு  பெறுவதற்கு ஜெர்மானியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஹிட்லர் தடை விதித்திருந்தார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக அவரது பெயரே நோபல் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..

பிரிட்டன் அரச குடும்பத்துக்கு வின்சர் என்ற பெயர் எப்படி வந்தது?

இங்கிலாந்தில் உள்ள வின்சர் கோட்டைக்கு ஹவுஸ் ஆப் வின்சன் என பெயரிடப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் பின்னணி என்ன தெரியுமா.. 1917 இல் தான் ஹவுஸ் ஆப் வின்சர் உருவானது. அதன் சாக்ஸ்-கோபர்க்-கோதெ என்ற ஜெர்மானிய சாயல் கொண்ட அந்த வரலாற்றுப் பெயருக்கு மாற்றாக, ஐந்தாம் ஜார்ஜ் அரசரின் ஆணையின் மூலம் அந்த பெயர் மாற்றப்பட்டு, ஹவுஸ் ஆப் வின்சர் என்பது இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரப் பூர்வ பெயராக இடம் பெற்றது. அது தற்போதைய அரச குடும்பத்தின் பெயராகவே மாறிவிட்டது. தற்போதை ராணி ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான அரச குடும்பங்களுடன் குடும்ப உறவுகளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கையும் மேற்கையும் இணைத்த வர்த்தக நகரம்

மத்திய கிழக்கின் தொல்லியல் பெருமைகளில் பல்மைரா நகரம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது மத்திய கிழக்கில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் இடங்களில் பல்மைரா நகரமும் ஒன்று. பாலைவனச் சோலை என கருதப்படும் சிரியாவில் இந்த நகரம் அமைந்துள்ளது. பண்டைய காலங்களில் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் வணிக வழி தொடர்புகளை இணைக்கும் மிகவும் முக்கியமான நகரமாக பல்மைரா விளங்கியது. இந்நகரில் உள்ள பல்வேறு இடங்களையும் ஐநா பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது.

வரலாற்றில் முதன் முதலாக சட்டம் எங்கு இயற்றப்பட்டது

மெசபடோமியா நாகரிகம் நாம் அனைவரும் நன்கு அறிந்த பண்டைய கால நாகரிகங்களில் ஒன்றாகும். அங்குதான் பழங்கால பாபிலோன் என்ற நகரம் சுமார் கிமு 2300களில் நிறுவப்பட்டது. இந்நகரை மிகவும் புகழ் பெற்ற அரசனான கிங் ஹம்முராபி என்பவன் ஆட்சி செய்து வந்தான். இவன்தான் மனித குல வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டங்களை வகுத்தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த பாபிலோன் நகரம் தொங்கும் தோட்டங்களுக்காக மிகவும் புகழ் பெற்றது. அது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கிரேக்கர்களால் கட்டப்பட்ட ஆப்கன் நகரம்

கான்ஸ்டிநோபில் என்ற நகரம் எது தெரியுமா.. இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் நவீன நகரமாக அறிப்படும் இஸ்தான்புல்தான் அது. இந்த இஸ்தான்புல் பல்வேறு சிக்கலான வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கிமு 657 இல் இந்த நகரம் கிரேக்கர்களால் நிறுவப்பட்டது. அப்போது அது பைசான்டியம் என அழைக்கப்பட்டது. பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு ரோமானிய பேரரசன் கான்ஸ்டன்டைன் தனது பேரரசின் தலைநகராக இதை மாற்றினான். அதன் பின்னர் அது ஐரோப்பாவின் முக்கிய நகராக மாறியது. அவர் இறந்த பிறகு அந்த நகருக்கு கான்ஸ்டான்டி நோபில் என பெயரிடப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் அந்த நகரம் இஸ்தான்புல் என அழைக்கப்படும் வரை அது அந்த பெயராலேயே விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

தேபெஸ் என்ற பழங்கால நகரம் எங்குள்ளது

தேபெஸ் என்ற கிரேக்க பெயருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்படி பெயருள்ள ஒரு பழங்கால நகரம் எகிப்தில் காணப்பட்டது. அதில் கிமு 3200 முதல் மக்கள் வசித்து வந்தனர். உலகிலேயே மக்கள் வசித்து வந்த பழமையான நகரங்களில் இதுதான் முதன்மையானது என்கின்றனர். தற்போது இந்த நகரம் லக்சார் என அறியப்படுகிறது.இங்குள்ள கர்நாக் என்ற பழமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் இன்றும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் எகிப்தியர்களின் வாடிகனை போல தேபெஸ் விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...