இன்றைய நவீன யுகத்தில் நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. இரணாடம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பிளாக் டீ குடியுங்கள் இது உங்கள் உடலில் உள்ள சர்க்கரை நோய் மற்றும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவும்.
![]() 12 hours 30 sec ago |
![]() 12 hours 2 min ago |
12 hours 4 min ago |
![]() 12 hours 6 min ago |
![]() 12 hours 7 min ago |
![]() 12 hours 8 min ago |
ஓய்வில்லா உழைப்புக்கு மட்டுமல்ல சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கு தேனீயே அடையாளமாக இருக்கின்றது ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. எனவே உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடியும் தேனீதான். தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மொத்தம் 44 இனங்கள் உள்ளன. அறிவியலில் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவை தேனீக்கள். மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களில் முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களில் மிகப் பெரியது. தலைமை வகிக்கும். இதன் ஆயுள் 3 ஆண்டுகள். இதன் வேலை இனப்பெருக்கம் செய்வது. 2 ஆவது ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, ராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. 3ஆவது வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்தையும் செய்யும். இதன் ஆயுள் 2 மாதங்கள். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது வேதனைக்குரியதுதானே..
ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..
நமது பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டயர்களில் ஏர் நிரப்புவது வழக்கம். அவை பொதுவான காற்றுதான். ஆனால் தற்போது புதிதாக சில பெட்ரோல் நிலையங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புகின்றனர். இவை வாகனங்களுக்கு நல்லதா... கொஞ்சம் பார்க்கலாமா...இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. வாகனங்களில் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறையாது. மேலும் பிரஷர் அளவை துல்லியமாக கணக்கிடும் எந்திரங்கள் தற்போது வந்துள்ளதால் டயருக்கு தேவையான துல்லியமான பிரஷர் கிடைக்கும். முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக்ட் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடிக்காது. பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் அதிகரிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் சாய்ஸ்...நைட்ரஜன் தானே.
மரக்கிளையில் பறவைகள்தான் கூடு கட்டும். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பறவைகள் மத்தியில் மரக்கிளையில் வீடுகள் கட்டினால் எப்படி இருக்கும். அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வடக்கு கர்நாடாகா. அங்கே தண்டேலி என்பது கோவா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகாவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு வெப்பமண்டல மழைக்காடு ஆகும். இங்கு தரையில் இருந்து 40 அடி உயரத்தில் ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் அமைந்துள்ளது. இது ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரிசார்ட் ஆகும். இது தண்டேலியின் கணேஷ்குடி பகுதியில் காளி நதி மற்றும் தடிமனான காடுகளுக்கு நடுவே அடர்ந்த மரங்களில் கிளைகளுக்கு மத்தியில் கனமான மூங்கில்களால் கட்டப்பட்ட குடிசை பாணியில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் தேனிலவுக்கு வரும் தம்பதிகளுக்கு ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் ஒரு சொர்க்கமான இடமாக திகழ்கிறது. என்ன தண்டேலிக்கு செல்ல ரெடியா...
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடமும் விதவிதமான சடங்கு சம்பிரதாயங்கள் காணப்படுகின்றன. அதில் மடகாஸ்கரில் உள்ள மலகாசி பழங்குடியினர் ஃபமதிஹானா என்ற ஒரு வித்தியாசமான இறுதிச்சடங்கு பழக்கவழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மூதாதையர்களை 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்லறையிலிருந்து வெளியே எடுப்பார்கள். அவர்கள் உடலில் இருக்கக்கூடிய பழைய துணிகளை அகற்றிவிட்டு மீண்டும் புதிய துணியை போர்த்தி தலைக்கு மேலே வைத்து கல்லறையை சுற்றி நடனம் ஆடுகிறார்கள். இறந்தவர்களை போர்த்திய புதிய துணியில் அவர்களுடைய பெயரை எழுதுகிறார்கள். இதற்கு காரணம் அந்த பெயர் எப்பொழுதும் அவர்களுடைய நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவாம். இறந்தவர்களுடைய ஆவியானது மூதாதையர்களின் உலகில் இணைகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கத்தை அவர்கள் வைத்துள்ளார்கள். இது ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறதாம். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..
சித்த மருத்துவ குறிப்புக்கள்
KFC Style பிரைடு சிக்கன்
2 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்
6 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்
1 week 2 days ago |
பாசி பருப்பு பாயாசம்
1 week 5 days ago |
தந்தூரி சிக்கன்
2 weeks 2 days ago |
ஆப்பிள் அல்வா
2 weeks 5 days ago |