முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

 1. அரையாப்பு கட்டி குணமாக ;-- வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும்.
 2. ஓடு வாயு கட்டிகள் ஆற ;-- செம்பை  இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டலாம்.
 3. கட்டிகள் குணமாக ;-- சப்பாத்திகள்ளி பூக்கள் மற்றும் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட உடைந்து விடும்.
 4. புண்,பிளவை,கட்டி படை குணமாக ;-- தரா  இலையை மை  போல் அரைத்து இவைகளுக்கு தடவி வர விரைவில் குணம் கிடைக்கும்.
 5. நரம்பு சிலந்தி குணமாக ;-- வேப்பம்பூ,மற்றும் வேப்பவிதையை அரைத்து கட்டலாம்.
 6. வீக்கம் கரைய ;-- சத்திசரணை  இலைச்சாறை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி தடவலாம்.
 7. கட்டி உடைய ;-- சிவனார் வேம்பு இலையை அரைத்து பற்று போட உடையும்,அல்லது அமுங்கும். 
 8. கட்டிகள் கரைய ;-- காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டலாம்.
 9. வீக்கம் ;-- ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில்  வீக்கம் மற்றும் வலியுள்ள இடங்களில் பற்றுப்போட குணமாகும்.
 10. கட்டி கரைய ;-- திருநீற்றுப்பச்சிலையை அரைத்து பூசலாம்.
 11. நெறிகட்டிகள் தீர ;-- தழுதாழை இலைச்சாறை ஆலிவ் எண்ணையில் வதக்கி  கட்டலாம்.
 12. கட்டிகள் வராமல் தடுக்க ;-- சிலந்தி நாயகம் இலைச்சாறை பாலுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
 13. சிலந்தி புண்;-- நாயுருவிசெடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து துணியில் வைத்து கட்ட புண் ஆறும்.
 14. வீக்கம் ஆற ;-- அமுக்கிரா பொடியை பாலில் கலந்து பூசலாம். 
 15. கட்டிகள்;-- அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடு கட்ட குணமாகும்.
 16. அரையாப்பு கட்டி சிலந்தி ;-- தென்னம்பூவை வாயிலிட்டு மென்று தின்னவும்.
 17. அடிபட்ட வீக்கம்,காயங்களுக்கு ;-- நத்தை சூரி இலையை வதக்கி கட்டினால் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்