முக்கிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

duckals devanantha

 

சென்னை,மார்ச்.- 5 - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் அவர் தன் மீதான கைது வாரண்டை திரும்பப் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியுள்ளது. சென்னை சூளைமேடு, திருவள்ளுவர்புரத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 1987 ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் என கடந்த 1994 ல் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தன்னை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என கூறுவதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதி நாகமுத்து,  தனது உத்தரவில் இந்த விவகாரம் கடுமையானதாக இருக்கிறது. அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அவர் விசாரணை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: