முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சாரத்திற்காக அத்வானி-சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் வருகை

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 8​- தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பாரதிய ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்க, அத்வானி, சுஷ்மா சுவராஜ், நரேந்திரமோடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் வருகிறார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள்,   தி.மு.க. கூட்டணி கட்சிகள் என இரு கூட்டணிகள் போட்டியிடுகின்றன. அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. தொகுதி வாரியாக போட்டியிட விரும்புபவர்களிடம்  இருந்து கடந்த இரு தினங்களாக  விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இதன் துவக்க நான்று  ஒரே நாளில் சுமார் 800 பேர் மனு கொடுத்தனர். 2​வது நாளான நேற்று 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின்போது பா.ஜ.க. மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:​

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு இன்றுடன்(நேற்று) வாங்கி முடிப்போம். நாளை கட்சியின் தேர்தல் குழு விருப்ப மனுக்களை பரிசீலனை செய்யும். அப்போது அகில இந்திய பொறுப்பாளர் பங்காரு லட்சுமணன், முரளிதரராவ், சதீஷ் ஆகியோர் முன்னிலையில் மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 

தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையிடம் 9​ந்தேதி ஒப்படைக்கப்படும். 10​ந்தேதி அகில இந்திய தேர்தல் குழு வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கும்.

அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறோம். ஒரு சில குறிப்பிட்ட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தனி கவனம் செலுத்துவோம். தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு அத்வானி, சுஷ்மாசுவராஜ், அருண்ஜேட்லி, வருண்காந்தி எம்.பி., ஹேமமாலினி, சித்து, முதல்​மந்திரிகள் நரேந்திரமோடி, எடியூரப்பா, ரமன்சிங், சிவராஜ்சவான் உள்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் வருகிறார்கள். 

தமிழகம் 44 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ளது. மதுவுக்கும், இலவசங்களுக்கும் மக்களை அடிமையாக்கி விட்டனர். தமிழ் என்ற பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். nullநீர் ஆதாரம் அழிக்கப்பட்டு விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது. மின் வெட்டு காரணமாக பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன. மத ரீதியாக மக்களை பிளவு படுத்துகிறார்கள். இந்த பிரச்சினைகளை தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடம் எடுத்துச் சொல்வோம். கூட்டணி குழப்பத்தால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டிய அவசியம் பாரதிய ஜனதாவுக்கு இல்லை. எங்களுக்கு என்று தனி வாக்கு வங்கி உள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்