முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறுநீரகத்தை பாதுகாக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.  வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம்.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

தலையில் இயற்கையான டார்ச் லைட்டை சுமக்கும் மீன்

ஆழ்கடல் அதிசயங்கள் தேட தேட தீராதவை. ஆழ்கடலுக்குள் 3 ஆயிரம் அடி ஆழம் வரை சூரிய ஒளி செல்ல முடியாது என்பதை நாம் அறிவோம். அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு தகவமைப்புகளை ஆழ்கடல் உயிரினங்கள் கொண்டுள்ளன. அவற்றில் மின்சார மீன், ஒளிரும் ஆக்டோபஸ் போன்ற உயிரினத்தை போலவே மற்றொரு அதிசயத்தையும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அது anglerfish எனப்படும் ஆழ்கடல் மீன் இருட்டை சமாளிக்க புதிய உத்தியை கையாள்வதாக தெரியவந்துள்ளது. இதன் தலைப்பகுதியில் போட்டோ பாக்டீரியா எனப்படும் ஒளிரும் பாக்டீரியாக்களை கவர்வதன் மூலம் ஒளியை உமிழச் செய்கின்றன என தெரியவந்துள்ளது. இது தலையில் டார்ச் லைட்டை பொறுத்தியது போன்ற தோற்றத்தையும் அதற்கு அளிக்கிறது. இயற்கை எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்கள்.

நாணயம் ரூ.57 கோடிக்கு விற்பனை

பொதுவாக நாணயத்தின் மதிப்பு அதில் பொறிக்கப்பட்டுள்ள அளவுக்கே இருக்கும். கொஞ்சம் பழைய நாணயங்கள், தொல்லியல் நாணயங்கள் சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதுண்டு.  அவற்றில் 1500 மதிப்புள்ள 20 அமெரிக்க டாலர் நாணயம் ஒன்று ரூ.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. 1933 இல் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த நாணயம் பெரிய அளவில் புழக்கத்தில் விடப்படவில்லை. சிறிய அளவே விடப்பட்டது. அதிலும் பலவற்றை உருக்கி விட்டனர். எஞ்சிய நாணயங்களை சேகரிப்பாளர்கள் வைத்துள்ளனர். அதில் ஒன்றுதான் கடந்த 2002 ஆம் ஆண்டு ரூ.57 கோடிக்கு விற்பனையானது. நாணய விற்பனையில் உலகிலேயே இதுதான் அதிக பட்சமாகும்.

ராவணனின் சடலம் எங்கிருக்கு தெரியுமா?

நமக்கு ராமாயணத்தை தெரியும். ராமனையும் ராவணனையும் தெரியும். ராமாயணப் போரில் ராவணன் கொல்லப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். பின்னர் சீதையை மீட்டுக் கொண்டு ராமன் அயோத்தி திரும்பினான். அதற்கு பின்னர் ராவணனுக்கு என்ன ஆனது, இலங்கையில் என்ன நடந்தது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் பின்னர் ராவணின் உடல் வீபிஷணனிடம் ஒப்படைக்கப்பட்டது. வீபிஷணன் தான் பட்டமேற்க உள்ளதால், அந்த உடலை ஒரு பேழையில் வைத்து நாக குல வீரர்களிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ராவணன் மயக்கத்தில் இருப்பதாக கருதி உடலை பல்வேறு மூலிகை தைலங்களால் பதப்படுத்தி ரக்லா என்னும் காட்டுப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயர குகையில் பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த குகையிலிருந்து அரச ஆடை ஆபரணங்களோடு கூடிய ராவணனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, புகைப்படமும் வெளியாகியுள்ளது. அப்பகுதி தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ராமாயணப் போரின் போது 9300 ஆண்டுகளுக்கு முன்பு கிமு 7292 நவம்பர் 15 இல் ராவணன் கொல்லப்பட்டதாகவும் இதன் மூலம் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நாமே கண்டுபிடிக்கலாம்

இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது, தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம். புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் மிகவும் அபாயமானது. இந்த வகை நோய்களை கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago