முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகளுக்கு டிசம்பர் 3-ந் தேதி ஊதியத்துடன் விடுமுறை

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.23 - ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசு ஆணைப்பிறப்பித்துள்ளது. இதுபோலவே அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சுயவிடுப்பு வழங்கப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக முதல்வரின் முந்தைய ஆட்சிக்காலத்தில் தான், அதாவது 1992-93-ல் தான் ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககம் ஏற்படுத்தப்பட்டது.

அரசின் உதவிக்கரம் மாற்றுத் திறனாளிகளை சென்றடையும் வகையில் பல சிறப்பான திட்டங்களை இந்த அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில் தான், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படுமென்றும், அதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சலுகை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்கள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை கொண்டாடும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார்.இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago