முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.18 -​கேரள காங்கிரஸ் அரசு இடைத்தேர்தலை மனதில் வைத்து முல்லைப்பெரியாறு அணையை கிளப்பி வருகிறது. இடைத்தேர்தல் முடிந்தவுடன் பிரச்சினை தீர்ந்து விடும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிம்பரம் மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். சென்னையில் நடந்த சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசியபோது, லோக்பால் மசோதா நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்படும். உணவு பாதுகாப்பு மசோதா வரும் திங்களன்று நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் கூறினார். மேலும் கூடங்குளம் பிரச்சினை குறித்து கூறுகையில், பொது மக்களின் அச்சங்களையும், சந்தேகங்களையும் தீர்த்து வைத்து பல கோடி மதிப்பிலான அணுமின் உற்பத்தி தொடங்கப்படும். மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியுள்ளார். 

முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாட்டுக்காகத்தான் கட்டப்பட்டது. கேரளத்துக்கு உள்ள அக்கறை தமிழ்நாட்டுக்கும் உள்ளது. அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. படிப்படியாக 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் உறுதியாக உள்ளது. எனவே நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்பது கேரள அரசின் தேவையற்ற அச்சம். இது நிரந்தர அச்சம், இடைக்கால அச்சம் என்று சொல்வதை விட இடைத் தேர்தல் அச்சம் என்று சொல்லலாம். அங்கு இடைத்தேர்தல் முடிந்தவுடன் இந்த அச்சமும் போய் விடும். 

வருகிற பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நீதிபதிகள் கொண்ட குழு தனது ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தமிழகத்துக்கு சாதகமான ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே சகோதரர்களாகிய தமிழர்கள்- மலையாளிகள் இடையே மோதல் போக்கு கூடாது. இந்த நல்லுறவு பல்லாயிரம் ஆண்டுகள் தொடர வேண்டும். இப்போது கேரளாவில் தலைமை செயலாளராக இருப்பவர் ஒரு தமிழர்தான். 

இதேபோல் பல கேரளத்தவர்கள் இங்கு தமிழகத்தில் தலைமை செயலாளர்களாக இருந்துள்ளனர். தமிழகத்தில் கேரள மக்களும், கேரளாவில் தமிழக மக்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும். தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டு எ   ன்று நிரூபிக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago