முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 100 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

குண்டூஸ், ஜூன் 9 - ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியான பஹ்லானில் உள்ள மலை பகுதி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடும் நிலச்சரிவு காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 70 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்களை தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், போர்வை, மருந்து பொருட்கள் மற்றும் தற்காலிக தங்கும் இடங்கள் ஏராளமாக தேவைப்படுகிறது என்று பப்லான் பிராந்திய போலீஸ் அதிகாரி ஜாவித் பஷாரத் கூறினார். 

ஆப்கானிஸ்தானில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் 2ம் கட்ட தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெறும் நிலையில் ஒரு பக்கம் தலிபான் தீவிரவாதிகளாலும் மறுபக்கம் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்