முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      புதுச்சேரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

முழு அடைப்பு போராட்டம்

புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், அதற்கு துணை போகும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் கட்டமாக ரயில் மறியல் போராட்டம் நேற்று நடந்ததுதொடர்ந்து இன்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பந்த் போராட்டத்தில் பிரதான எதிர்க்கட்சிகளான என்ஆர் காங்கிரஸ், அதிமுக கட்சிகள் பங்கேற்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் நலனை கருதி நடைபெறும் போராட்டம் என்பதால் ஆதரவு அளிக்கா விட்டாலும் அமைதி காத்து வருகின்றன. இதற்கிடையே திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவையில் உள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள், பஸ் தொழிலாளர்கள் சங்கம், பெரிய மார்க்கெட், சிறிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், என அனைத்து தரப்பினரும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எனவே புதுவையில் இன்று பஸ்கள் ஓடாது. தமிழகத்திலும் பந்த் போராட்டம் நடப்பதால் தமிழகத்தில் இருந்தும் இன்று பஸ் எதுவும் புதுவைக்கு வராது. டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. வர்த்தக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக் கடைகள் வரை இயங்காது. பெரிய மார்க்கெட், சிறிய மார்க்கெட்டுகளும் இயங்காது. பந்த் போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து