தொலை தொடர்பு துறையில் பதஞ்சலி நிறுவனம்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2018      வர்த்தகம்
patanjali 2018 01 17

யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி,  தற்போது பிஎஸ்.என்.எல் உதவியுடன் தொலைத்தொடர்பு துறையிலும் தடம் பதித்துள்ளது. சுதேதி சம்ரித்தி என்ற சிம் கார்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டில் ரூ.144-ல்  அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் என பல்வேறு அதிரடி சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.  முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் வழங்கப்படுகிறது.

விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த சுதேசி சம்ரதி சிம்கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடியில் பதஞ்சலி தயாரிப்புகளை வாங்கிக்கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து