பெரிய ஹிட்டர்கள் எங்களிடம் இல்லை தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் கருத்து

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      விளையாட்டு
bangladesh captaiin 2019 11 11

நாக்பூர் : நாக்பூர் நடைபெற்ற கடைசி டி - 20 போட்டியில் தீபக் சாஹரின் பந்துவீச்சால்  இந்திய அணி வங்கதேசத்தை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

வங்கதேச அணி மொகமட் நயீமின் அதியற்புத 81 ரன்களினால் 110/2 என்று 13 ஓவர்கள் முடிவில் வலுவாக இருந்தது. ஆனால் கடைசி 8 விக்கெட்டுகளை 6.2 ஓவர்களில் 34 ரன்களுக்கு இழந்து வெற்றியை இந்திய அணிக்குத் தாரை வார்த்தது. உலக சாதனையான 7 ரன்களுக்கு 6 விக்கெட்டைக் கைப்பற்றிய தீபக் சாஹர் டி - 20 சர்வதேச போட்டியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்திய பவுலர் ஆனார் சாஹர்.

இது குறித்து வங்கதேச கேப்டன் மஹமுதுல்லா கூறியதாவது:-

30 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற நிலையில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அவசரம் அவசரமாக விக்கெட்டுகளை இழந்தோம். டி - 20 கிரிக்கெட்டில் உத்வேகத்தை இழந்து விட்டால் மீட்பது கடினம். நான் ஏற்கெனவே கூறியது போல் நாங்கள் வெற்றிக்கு நெருக்கமாகவே வந்தோம். 6-7 பந்துகளில் 3 - 4 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இப்படிப்பட்ட தவறுகளை திரும்பத் திரும்பச் செய்ய முடியாது. உள்ளபடியே கூறவேண்டுமெனில் டி - 20 கிரிக்கெட்டில் நாங்கள் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டியுள்ளது. சாதுரியமான, திறமையான ஹிட்டர்களை நம்பியிருக்கும்  அணியாகும் எங்களுடைய அணி. பெரிய ஹிட்டர்கள் எங்களிடம் இல்லை. எனவே ஆட்டம் பற்றிய நுண் அறிதிறன் சீரான முறையில் இருந்தால், புத்தி சாதுரியம் இருந்தால் இந்த வடிவத்தில் நாங்கள் முன்னேற்றம் காண முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து