திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் - பிரசாதம் மே மாதம் முதல் ரத்து: தேவஸ்தானம்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      ஆன்மிகம்
Tirupathi Prasatham 2020 02 09

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் பிரசாதம் மே மாதம் முதல் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய  தினமும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள்  லட்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். அதன்படி ஒவ்வொரு பக்தரும் சுமார் 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்றுச் செல்கின்றனர்.  இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் பிரசாதம் மே மாதம் முதல் ரத்து என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினசரி, வாராந்திர சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தலா ஒரு சிறிய லட்டு மட்டுமே இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சேவைகளின் போது வழங்கப்படும் பிரசாதங்களை தேவைப்படுவோர் பணம் செலுத்தி வாங்கி கொள்ள  வேண்டும். ஏப்ரல் வரை சேவைகளில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்களுக்கு வழக்கம் போல் பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படும். மே மாத சேவைகளில் பங்கேற்க முன்பதிவு செய்பவர்களுக்கு பிரசாதங்களை விலை கொடுத்து வாங்கும்  புதிய முறை அமல்படுத்தப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் இலவச பிரசாதம் ரத்து செய்யப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை சேவைகளின் போது வழங்கப்பட்டு வந்த இலவச  பிரசாதத் திட்டத்தை ரத்து செய்தது நல்ல முடிவு அல்ல. சேவைகளில் பங்கேற்போருக்கு இலவச பிரசாதங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து