முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பின் தூதுக்குழுவில் இடம்பெறும் மகள் இவான்கா மற்றும் மருமகன்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டிரம்பின் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும்  அவருடன் வரும் உயர்மட்ட தூதுக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.  டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார்.  வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார்.  அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொதுக்கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.  டிரம்பின் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும்  அவருடன் வரும் உயர்மட்ட தூதுக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

தூதுக்குழுவில்  கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் மற்றும் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் ஆகியோர் அடங்குவர். 25-ம் தேதி அதிபர் டிரம்ப்- பிரதமர்  மோடி  பேச்சுவார்த்தையில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரித்தல் மற்றும் எச். 1 பி விசா பிரச்சினைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து