முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு: டிரம்பை பின்னுக்கு தள்ளி ஜோபிடன் முன்னிலை

சனிக்கிழமை, 27 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் 6 மாகாணங்களிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், டிரம்பை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில்  டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். 

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் ஆதரவில்லாமல் தொங்கு மாகாணங்களாக அறியப்படும் அரிசோனா, புளோரிடா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய இடங்களில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மற்றும் சியானா கல்லூரி கருத்துக்கணிப்பு நடத்தியது.

கடந்த 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் மேற்கூறிய 6 மாகாணங்களிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன், டிரம்பை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் ஜோபிடன், டிரம்பை விட 6 புள்ளிகளுக்கும் மேலாக பெற்று முன்னிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரசாரங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து