முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது : சி.எஸ்.ஐ.ஆர் மீண்டும் உறுதி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது எனவும், இது காற்றின் மூலம் பிறருக்கு பரவாது எனவும் சி.எஸ்.ஐ.ஆர்  எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது. 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும், காற்றின் மூலம் அது பரவும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்தது.

காற்றின் மூலம் கொரானா வைரஸ் பரவாது என்று அது தெரிவித்துள்ளது.  இந்த கருத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்.) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் ஆய்வக இயக்குனர் சேகர் மாண்டே ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 

கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் அவரிடமிருந்து கொரோனா வைரஸ்கள் சில அடி தூரம் காற்றில் பறந்து சென்று கீழே விழும். இதை வைத்து அது காற்றில் மிதக்கும் என்று கூற முடியாது. காற்றில் பரவும் வைரஸ்கள் என்பது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டவை.

சின்னம்மை, பெரியம்மை, இன்புளூயன்சா போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது. எனவே இது காற்றின் மூலம் பிறருக்கு பரவாது என்று கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து