கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      சினிமா
Amitabh 2020 08 02

Source: provided

மும்பை : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சன் குணமடைந்தார். அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியதாக அவரது மகன் அபிஷேக் தகவல் தெரிவித்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்திய அளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் நேற்று நானாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது  மகன் அபிஷேக் பச்சன் இந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். எனது தந்தை, தனது சமீபத்திய கோவிட் -19 சோதனையில் எதிர்மறையை சோதித்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். அவர் இப்போது வீட்டில் இருந்து ஓய்வெடுப்பார். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் அவருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து