மகாராஷ்டிரா - பீகார் இடையே விவசாயிகள் ரயில் சேவை : மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல்-நரேந்திரசிங் தோமர் துவக்கி வைத்தனர்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
Pius Goyal-Narendrasingh Tomar 2020 07 29

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா - பீகார் இடையே இந்தியாவின் முதல் விவசாயிகள் ரயில் சேவையை மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் நலனுக்காக வேளாண் பொருட்களை கொண்டு செல்ல மட்டும் தனி ரயில் இயக்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தாா். எளிதில் அழுகும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்லும் வகையில் இந்த ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.  

இந்த நிலையில் இந்தியாவின் முதல் விவசாயிகள் ரயில் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் தேவ்லாலி நகரில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் விவசாயிகள் ரெயில் பீகார் மாநிலம் தானாப்பூருக்கு புறப்பட்டு சென்றது. 

இந்த ரயில் சேவையை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த விழாவில் ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, மாநில அமைச்சர் சகன்புஜ்பால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் ரயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தேவ்லாலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 6.45 மணிக்கு தானாப்பூர் சென்றடையும். இதேபோல ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு தானாப்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 7.45 மணிக்கு தேவ்லாலி வந்தடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து