திருப்பதி கோயிலில் ரூ2.13 கோடி காணிக்கை

Tirupati 2021 07 23

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மூலம் ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்ற 2 ஆயிரம் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தற்போது சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு தரிசனம் செய்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப கோயிலில் உள்ள உண்டியல்களில் நகை, பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

 

அவ்வாறு பக்தர்கள் செலுத்திய காணிக்கை கணக்கிடப்பட்டது. இதில் ரூ.2.13 கோடி காணிக்கையாக கிடைத்தது. காலை முதல் இரவு வரை 25,821 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 13 ஆயிரத்து 542 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து