முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 2-ம் கட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.  தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க - அ.தி.மு.க கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு குறித்து விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பெரியகுளம், தேனி அல்லி, கூடலூர், போடி நாயக்கனூர், கம்பம், சின்னமனூர் நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதே போல் சேலம் புறநகர் எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய நகராட்சிகளுக்கும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளுக்கும், திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி, திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திருவேற்காடு, திருநின்றவூர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர், திருத்தணி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யார்(திருவந்திபுரம்), வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர், முசிறி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூர், விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மேற்கு மாவட்டம் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், உடன்பிறப்புகள் இணைந்து அதிகாரபூர்வ வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அதில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

முன்னதாக நேற்று முன்தினம், அ.தி.மு.க. தரப்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  கடலூர் மாநகராட்சி, தர்மபுரி, விழுப்புரம் நகராட்சிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருந்தது. அதே போல நகராட்சிகளில் சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தர்மபுரி நகராட்சியில் 31 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!