முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்

புதன்கிழமை, 2 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அவர்களின் சின்னத்திலேயே போட்டியிடலாம். 

அதேவேளை, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் வெவ்வேறு சின்னங்களை ஒதுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியின் பொதுச்சின்னமான ’விவசாயி’ சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். 

அந்த கோரிக்கையை ஏற்று நாம் தமிழர் கட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!