முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிது கங்காஸ்..!

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Nitu-Gangas 2022-08-07

Source: provided

பர்மிங்ஹாம் : காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார். பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

10-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் இங்கிலாந்து வீராங்கனை டெமி-ஜேட் ரெஸ்டனுடன் மோதினார்.

இந்த போட்டியில் நிது கங்காஸ் 5-0 என்ற கணக்கில் டெமி-ஜேட் ரெஸ்டனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். தற்போது இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து