முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைவேந்தர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்ட சிக்கல் உள்ளது : தமிழக கவர்னர் ரவி விளக்கம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
rn-ravi- 2022 08 25

Source: provided

சென்னை : பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருந்து வரும் நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், துணை வேந்தரை நீக்கம் செய்யவும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள வகையிலும் இரண்டு மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். 

துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினார்.  இந்நிலையில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டசிக்கல் உள்ளதாக கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.  கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், அரசியல் சாசன ஆலோசனைகளை பெற்றே முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதில் சட்ட சிக்கல் இருக்கிறது. பல்கலைக் கழக வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கு யு.ஜி.சி. விதிகளில் இடம் இல்லை. பல்கலைக் கழகங்களில் தரமான கல்வியை வழங்குவதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து