முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் முதன்முறையாக சட்ட பத்திரிகை தலைவர் பதவிக்கு இந்திய - அமெரிக்கர் நியமனம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      உலகம்
Indian-American 2023 02 06

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் மிக பழமை வாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு முதன்முறையாக இந்திய - அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹார்வர்டு சட்ட பள்ளியின் ஒரு பகுதியாக கடந்த 1887-ம் ஆண்டு முதல், சட்டம் பயில கூடிய மாணவ மாணவியர்களால் சட்டம் சார்ந்த தகவல்களை அளிக்கும் பத்திரிகை ஒன்று வெளிவர தொடங்கியது. இது, உலக அளவில் அதிக வாசகர் வட்டங்களை கொண்டுள்ளது. அதனால், விற்பனையிலும் முன்னணியில் உள்ளது. 

இதன் 137-வது தலைவராக இந்திய அமெரிக்கரான அப்சரா ஐயர் என்பவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 136 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அமெரிக்கர் ஒருவர், கவுரவம் வாய்ந்த இந்த பொறுப்பை ஏற்பது இதுவே முதன்முறையாகும். 

ஹார்வட்டு சட்ட பள்ளியின் 29 வயது மாணவியான அப்சரா, 2018-ம் ஆண்டில் இருந்து கலை பொருட்கள் சார்ந்த குற்ற பிரிவில் புலனாய்வு மேற்கொள்வது மற்றும் அவற்றை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பது ஆகிய பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து