முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் : பட்ஜெட் உரையில் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
PTR-3 2023 03 20

Source: provided

சென்னை : சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் கூறியதாவது: 

கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்கத் தமிழ்ப் பண்பாட்டு தல வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். 

இந்த பயணங்கள் இனத்தின் செம்மையான பயணங்கள், கலை, பண்பாடு, கைவினை பொருட்கள், உணவு முறையை வெளிக் கொண்டு வருவதோடு தமிழ்நாடு புகழையும் இது பரப்பும்.  

மேலும், சோழப் பேரரசு பங்களிப்பைப் போற்றும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இவ்வாறு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து