முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பரவும் பறவைக்காய்ச்சல்: 3.30 லட்சம் கோழிகளை அழிக்க முடிவு

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      உலகம்
Japan 2023 03 25

Source: provided

டோக்கியோ : ஜப்பானில் பரவி வரும் பறவை காய்ச்சலை தொடர்ந்து 3.30 லட்சம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. 

மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பறவைக் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக இந்த பண்ணையில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். 

ஜப்பானில் கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதும், இதன் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து