முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      இந்தியா
India-Meteorological 2022

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருப்பதாவது: 

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென் மேற்கு ஜார்க்கண்ட் மற்றும் வடக்கு சத்தீஸ்கரின் மீது நிலவுகிறது. ஒடிசாவில் இன்று (அக். 3) ஜர்சுகுடா, பார்கார், சம்பல்பூர், சோன்பூர், தியோகர் மற்றும் அங்குல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் சராசரியாக 16 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக 4 இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிக மழைப் பதிவாகியுள்ளது.   மாநிலத்தில் அதிகப்படியாக பதாம்பூரில் 114 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து