முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      தமிழகம்
CM-1 2024-03-03

Source: provided

சென்னை : ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மயிலாடுதுறை புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து உள்ளார். இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று (மார்ச் 03) மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, முதல்வர்  மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை புறப்பட்டார். அப்போது எழும்பூரில் ரயில் நிலையத்தில் திரண்டிருந்த திமுக தொண்டார்கள் முதல்வர் ஸ்டாலினை வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நேற்று இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கினார். இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு கார்மூலம் மயிலாடுதுறை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்வை முடித்து விட்டு, இன்று மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கும் மீண்டும் சென்னை வந்தடைகிறார். முதல்வரின் இந்த ரயில் பயணம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து