முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்திடம் லக்னோ அணி தோல்வி :நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முதலாவதாக வெளியேறிய மும்பை

வியாழக்கிழமை, 9 மே 2024      விளையாட்டு
9-Ram-50

Source: provided

மும்பை: ஐதராபாத்திற்கு எதிரான தோல்வி காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முதல் அணியாக மும்பை அணி வெளியேறியுள்ளது. இதற்கு ஹர்த்திக் பாண்டியாவின் கேப்டன்சி சரியில்லை என்று மும்பை அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

165 ரன்கள் குவிப்பு... 

7-வது ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.

பிளே ஆப் சுற்றுக்கு.... 

இந்த நிலையில் ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 4 மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகளே உள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து