முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் அதிக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      இந்தியா
Jaishankar 2023 06 08

Source: provided

லக்னோ : வாரணாசி தொகுதியை பொறுத்தவரை அதிக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் அதிக பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

பொதுமக்களிடம் அரசாங்கம் குறித்த பின்னூட்டத்தை கேட்டு தெரிந்து கொள்வது மோடி அரசின் வழக்கம். இந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் வெளியுறவு கொள்கை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். 

பிரதமர் மோடி இந்த நாட்டை எத்தகைய இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஜி-20 மாநாட்டை ஒரு திருவிழாவைப் போல் நாட்டின் 60 நகரங்களில் கொண்டாடினோம். 

காசி நகரத்தை நாம் இன்னும் அதிகமாக விளம்பரப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் இங்கு சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சியடையும்.  வாரணாசியை பொறுத்தவரை, அங்கு அதிகமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து