முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரன் ரூ. 50,800-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் விலை சற்று உயர்ந்தது.

இந்த வார தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 51,760-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ரூ. 1,120 குறைந்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 50,640-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை ரூ.160 உயர்ந்தது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 50,800-க்கு, ஒரு கிராம் ரூ. 6,350-க்கு விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ. 86.50-க்கும், ஒரு கிலோ ரூ. 86,500-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து