முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்ஜியம் கார் ரேஸில் 2-ம் இடம் பிடித்த அஜித் அணிக்கு பிரபலங்கள் வாழ்த்துகள்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      சினிமா
Ajith-kumar-2025-1-15

Source: provided

சென்னை : பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது ‘குட் பேட் அக்லி’.

இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கினார். முன்னதாக, துபாயில் நடந்த ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் அஜித் தலைமையிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்று 2-ஆம் இடம் பிடித்தது.

இந்த நிலையில், தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் போடியத்தில் நிற்கும் அஜித் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து