முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி., - நியூசி., போட்டி ரத்து

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பெய்ததன் காரணமாக இந்த ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்திருந்தது. 

அப்போது மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதும். ஆனால் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. இந்த தொடரில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

_________________________________________________________________________________________________________________

சர்ச்சையில் முன்னாள் கேப்டன்

மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட மொத்தமாக 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டனான சானா மிர் பேசிய வார்த்தை தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப்புறங்களில் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவும் தொடர் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் ஒரு அங்கமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனையான நட்டாலியா பெர்வைஸ் குறித்து பேசும்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சானா மிர், “நட்டாலியா ஆசாத் காஷ்மீரில் இருந்து வந்தவர். அவர் லாகூரில் அதிகளவிலான நேரத்தை கிரிக்கெட்டுக்காக செலவிடுகிறார். அவர் கிரிக்கெட் விளையாட பெரும்பாலான நேரம் லாகூர் வரவேண்டியிருக்கும்” எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் வேண்டுமே சர்ச்சையைத் தூண்ட வேண்டும் என்று இப்படி கூறியதாக ரசிகர்களும் கொத்தளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து