முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் - ஜடேஜா - ஜூரல் அபாரம்: அகமதாபாத் முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா..!

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      விளையாட்டு
Jadeja

Source: provided

அகமதாபாத் : ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.

121 ரன்கள் குவிப்பு...

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாள் ஆட்டம்...

நேற்று ஆட்டத்தைத் தொடங்கிய கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மல் கில் இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அசத்தலாக விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் ஷுப்மல் கில் 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சதமடித்தார். அவர் 197 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின்னர் கைகோர்த்த விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா இருவரும் சேர்ந்து நிதானமாக தொடங்கினர். அதே வேகத்தில் அவர்கள் சில பந்துகளை எல்லைக் கோட்டுக்குத் தெறிக்கவிட்டனர்.

172 ரன்கள் முன்னிலை... 

இதனால், அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. இந்திய அணி 99 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. துருவ் ஜூரல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 74 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி 172 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், சீல்ஸ், ஜோமல் வாரிகன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

மகளுக்கு அர்பணிப்பு

முதல் நாள் ஆட்டநேர முடிவில் கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் 197 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 11-வது டெஸ்ட் சதமாகும். சதம் விளாசிய கே.எல்.ராகுல் சதத்தை தனது மகளுக்கு அர்பணிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினார். இரண்டு விரலை வாயில் வைத்து கொண்டு கை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து