முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனம் வாங்சுக்கை விடுவிக்கக்கோரி அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : தனது கணவரை விடுவிக்கக்கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது கணவர் சோனம் வாங்சுக்கை விடுவிக்கக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சோனம் வாங்சுக்கின் தடுப்புக் காவலுக்கு எதிராக ஆட்கொணர்வு (ஹீபஸ் கார்பஸ்) மனு மூலம் சுப்ரீம் கோர்ட்டிடம் நிவாரணம் கோரியுள்ளேன். சோனம் வாங்சுக்கின் உடல்நிலை, அவர் இருக்கும் நிலை அல்லது தடுப்புக் காவலுக்கான காரணங்கள் குறித்து இதுவரை எனக்கு எந்த தகவலும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 24 வன்முறைக்குப் பிறகு மத்திய அரசை கீதாஞ்சலி ஆங்மோ கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார். "இந்தியாவில் உண்மையிலேயே சுதந்திரம் இருக்கிறதா? 1857ம் ஆண்டில் இங்கிலாந்து அரசியின் உத்தரவின் பேரில், 24,000 பிரிட்டிஷ்காரர்கள், 1,35,000 இந்திய சிப்பாய்களைப் பயன்படுத்தி 30 கோடி இந்தியர்களை ஒடுக்கினர். இன்று, ஒரு டஜன் நிர்வாகிகள் 2400 லடாக் காவல்துறையினரை தவறாகப் பயன்படுத்தி உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் 3 லட்சம் லடாக் மக்களை ஒடுக்கி சித்ரவதை செய்கின்றனர்” என தனது எக்ஸ் பக்கத்தில் கீதாஞ்சலி ஆங்மோ குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், சோனம் வாங்சுக்கை விடுவிக்கக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கீதாஞ்சலி ஆங்மோ மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து