முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்கோவில் பயிற்சி பள்ளிகளில் பயின்ற 108 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் : அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 108 மாணவ, மாணவியருக்கான சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (03.10.2025) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் 2024- 25 ஆம் கல்வியாண்டில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 2 பெண்கள் உள்பட 89 மாணவர்கள், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவார் பயிற்சி முடித்த 12 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்கள் என ஆக மொத்தம் 108 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது;-

திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அர்ச்சகர் பயிற்சி பள்ளி, ஓதுவார் பயிற்சி பள்ளி, தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளி, வேத ஆகம பாடசாலைகள், 4000 திவ்ய பிரபந்தம் பயிற்சி பள்ளிகள் என 21 பயிற்சி பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு, இந்த பயிற்சி பகுதிகளுக்கு உண்டான தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமிக்கபட்டு, தொடர்ந்து இந்த பயிற்சி பள்ளிகள் சிறப்போடு திராவிடமான வளர்ச்சியுடன் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி பணியுடைய ஆரம்பகால ஊக்கத் தொகை ரூ.500 என்று 2007 ஆம் ஆண்டில் இருந்ததை, 2021 ஆம் ஆண்டு வரை வெறும் ரூ.1,000 என்ற அளவில்தான் வழங்கியிருந்தது. தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்றவுடன், 2021–22 ஆம் ஆண்டில், முழுநேர பயிற்சி பள்ளியில் பயில்கின்ற மாணவச் செல்வங்களுக்கு ரூ.3,000 மற்றும் பகுதிநேர பயிற்சி பள்ளியில் பயில்கின்ற மாணவச் செல்வங்களுக்கு ரூ.1,500 ஊக்கத் தொகையாக அறிவித்தார்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 3,707 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்குள் 4,000 என்பதைத் தொடும் என்று நம்பிக்கை உள்ளது. நில மீட்பு குறித்து எடுத்துக்கொண்டால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, ரூ.8,015.80 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன், இந்து சமய அறநிலைத்துறை நிலங்களை அடையாளப்படுத்தும் பணிக்காக எல்லைக் கற்கள் பதிக்கப்படும் பணிகள் துவக்கப்பட்டு, இதுவரை 1,41,820 எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து