முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாம்பியன்ஷிப்பில் பளு தூக்குதல்: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      விளையாட்டு
Mirabai-Chanu 2025-10-03

Source: provided

ஓஸ்லோ : உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் இத்துடன் இவர் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

48 கிலோ எடைப்பிரிவு...

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு 48 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றுள்ளார். இதற்கு முன்பாக 2017, 2022 உலக சாம்பியன்ஷிப்பில் முறையே வெண்கலம், வெள்ளி வென்றிருந்தார். தற்போது, நார்வேயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் (84 கிலோ ஸ்நாட்ச் + 115 கிலோ க்ளீன், ஜெர்க்) மொத்தமாக 199 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளி வென்றுள்ளார்.

மூன்று முறையும்.... 

87 கிலோவை தூக்க முயற்சித்த போது இரண்டு முறை தவறியவர், மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பி 115 கிலோ க்ளீன், ஜெர்க் பிரிவில் மூன்று முறையும் வெற்றிகரமாக தூக்கி அசத்தினார். இந்தப் பிரிவில், மீராபாய் சானு 109 கிலோ, 112 கிலோ, 115 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கி அசத்தினார். கடைசியாக, மீராபாய் சானு 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 115 கிலோவை தூக்கி வெள்ளி வென்றிருந்தார்.

வட கொரிய தங்கம்...

வட கொரியாவைச் சேர்ந்த ரி சாங் கும் 213 கிலோ (91 கிலோ + 122 கிலோ) பளுவைத் தூக்கி தங்கம் வென்றார். மேலும், க்ளீன், ஜெர்க் பிரிவில் 122கிலோ பளுவைத் தூக்கி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தான்யத்தோன் சுக்சரோயன் 198 கிலோ (88 கிலோ + 110 கிலோ) பளுவைத் தூக்கி வெண்கலம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து