முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். பணி: வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு தலைமை தேர்தல் ஆணையர் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2025      இந்தியா
Election Commissioner

Source: provided

பாட்னா : பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நன்றி தெரிவித்தார்.

பாட்னாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று (அக். 5) செய்தியாளர்களுடன் பேசினார். பீகார் தேர்தல் குறித்து அவர் பேசியதாவது: “அண்மையில், பீகாரில் வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூத் நிலை அதிகாரிகள் அதில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத் அளவிலான வாக்காளர்கள் பட்டியல் சரிபார்ப்பு அப்ணிகளை மேற்கொண்டனர்.

இதற்காக 90,217 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். பீகார் அதிகாரிகளின் இந்த வாக்காளர் திருத்தப் பணி நாட்டின் பிற பகுதிகளுக்கும் உத்வேகம் அளிக்கும். வாக்காளர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம். பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.

பீகாரில் உள்ள அனைத்து வாக்காளர்களும் சத் பூஜையை கொண்டாடுவது போலவே அதே உர்சாகத்துடன் இந்த ஜனநாயக திருவிழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் வாக்கு செலுத்த வேண்டும்; அதன்மூலம் தஙக்ள் பங்களிப்பை உருதி செய்யவும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து