எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பீகாரை போல தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முயன்றால், அதற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும் என்று அமைச்சர் கே.என். எச்சரித்துள்ளார். மேலும் பீகாரில் கடைப்பிடிக்கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். இன்டியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்கவில்லை.
ஆட்சிகளை மாற்றுவது, அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.
பீகாரைப் போலத் தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முயன்றால், அதற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். எஸ்.ஐ.ஆர். என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.
மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகாரங்கள் கொண்ட சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவையாக மாறின. இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் மத்திய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தல் தேதி முன்கூட்டியே பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் முன்னரே பிரசாரக் கூட்டங்களை நடத்திவிட்டு போனார் பிரதமர் மோடி. இதன் மூலம் தேர்தல் தேதி ரகசியத்தைத் தேர்தல் ஆணையம் காக்கத் தவறியது அப்பட்டமாகவே வெளிப்பட்டது.
பீகாரில் சுமார் 8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தேர்தல் ஆணையம் பல லட்சம் வாக்காளர்களை நீக்கியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றமே கண்டித்தது. பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து முதலில் 65 லட்சம் பேரைத் தேர்தல் ஆணையம் நீக்கியது. அடுத்து 3.7 லட்சம் பேரை நீக்கினார்கள். இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன.
இப்போது புதிதாக 21 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இணைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். நீக்கப்பட்ட 3.7 லட்சம் பேரின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறும், புதிதாகச் சேர்க்கப்பட்ட 21 லட்சம் பேரும் முன்பு நீக்கப்பட்ட வாக்காளர்களா? அல்லது புதிய வாக்காளர்களா? என்ற விவரங்களை அளிக்குமாறும் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை நோக்கி உச்சநீதிமன்றத்தின் கேள்விகள், எஸ்.ஐ.ஆர். மேற்கொள்வதில் தேர்தல் ஆணையத்திடம் உள்ள நேர்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
பீகாரில் எஸ்.ஐ.ஆர்.-ல் நடைபெற்றுள்ள மோசடியை ஸ்குரோல் இணையப் பத்திரிகை கள ஆய்வு மூலம் வெட்ட வெளிச்சமாக்கியது. பீகாரின் மூன்று தொகுதிகளில் உள்ள 200 வாக்குச்சாவடிகளில் 10-ஐ பார்வையிட்டு, 100 பேரிடம் பேட்டி கண்டது. இவர்களில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர். இறந்துவிட்டதாகக் கருதப்பட்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், பல இடங்களில் பதிவு செய்தவர்கள், அல்லது காணப்படாதவர்கள் என தேர்தல் ஆணையம் நான்கு காரணங்களுக்காக வாக்காளர்களை நீக்கியிருந்தது. நாங்கள் சந்தித்த பெரும்பாலான வாக்காளர்கள், பல ஆண்டுகளாக அதே முகவரியில் வசித்து வந்த போதிலும், ’காணப்படவில்லை’ அல்லது ’இடமாற்றம்’ என்று குறிக்கப்பட்டிருந்தனர் என ஸ்குரோல் தெரிவித்திருக்கிறது.
தேர்தல் ஆணையம், “வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு” நடத்தப்படும் என்று தெளிவாகக் கூறியிருந்த போதிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கு வரவே இல்லை என்று வாக்காளர்கள் ஸ்குரோல் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். பீகாரில் கடைப்பிடிக்கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படாமலேயே நமது வாக்காளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்கவும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
சாத்விக்-சிராக் முன்னேற்றம்
18 Nov 2025ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.


