முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
Vande-Bharat-Rail 2023-10-0

Source: provided

சென்னை : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்.

சென்னை - நெல்லை இடையே 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரெயில், பயணிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்ற நிலையில், 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டது. ரெயில் பெட்டிகளும் ஆரஞ்சு நிறத்தில் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் இன்று (வியாழக்கிழமை) முதல் கோவில்பட்டியில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 20665, 20666) இன்று முதல் தற்காலிகமாக கோவில்பட்டியில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரும் ரெயில் இரவு 9.23 மணி முதல் 9.25 வரையும், நெல்லையில் இருந்து சென்னை வரும் ரெயில் காலை 6.38 முதல் 6.40 வரையும் 2 நிமிடங்கள் கோவில்பட்டியில் நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து