முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா: வெடிவிபத்தில் 6 பேர் பலி - முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல்

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      இந்தியா
chandrababu-naidu

Source: provided

விசாகப்பட்டினம் : ஆந்திரவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேசத்தின் அம்பேத்கர் கொனசீமா மாவட்டத்தின் ராயவரம் மண்டலத்திற்கு உட்பட்ட குமரிபாலம் கிராமத்தில் லட்சுமி கணபதி என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதில், திடீரென நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தியில், வெடிவிபத்தில் பலர் பலியான சம்பவம் ஆழ்ந்த வருத்தம் தருகிறது. வெடிவிபத்திற்கான காரணம் பற்றி அதிகாரிகளிடம் பேசி கேட்டறிந்துள்ளேன். தற்போதுள்ள சூழல், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவி ஆகியவை பற்றியும் விசாரித்து உள்ளேன். சம்பவ பகுதிக்கு மூத்த அதிகாரிகள் நேரில் தனிப்பட்ட முறையில் சென்று, நிவாரண பணிகளில் ஈடுபடும்படி உத்தரவிட்டு உள்ளேன். காயமடைந்த நபர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் துணையாக இருப்போம் என்று தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து