முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் இந்திய தரப்பு பதிலடி: பாக்., வீரர் பலி

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜன. 18 - ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6 ம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8 ம் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வீரரின் தலையை துண்டித்தும் எடுத்துச் சென்றனர். இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவு விரிசலைடைந்து எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பாகிஸ்தானுடனான சுமூக உறவு இல்லை என்றும் நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரித்திருந்தார். பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி நேற்று முன்தினம் இரவு 8. 15 மணியளவில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் புதிய தாக்குதலுக்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்த ஜனவரி மாதம் மட்டும் நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்